பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவங்க வரும் கல்வியாண்டு முதல் அனுமதி கோரலாம் : ஏ.ஐ.சி.டி.இ

0 4303

பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவங்க வரும் கல்வியாண்டு முதல் அனுமதி கோரலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கமான ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக புதிய படிப்புகளை துவங்க பொறியியல் கல்லூரிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

அதனை ஊக்கப்படுத்தும் விதமாக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கமும், புதிய பாடப்பிரிவுகளைத் துவங்க, முந்தைய ஆண்டுகளில் 50% மாணவர் சேர்க்கை பதிவாகியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தமிழகத்திலுள்ள 258 பொறியியல் கல்லூரிகளும், புதிய படிப்புகளைத் துவங்க அனுமதி கோரலாம் என்றும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments