கரையில் இருந்த துணிகள்:பலியான 3 சிறுவர்கள்;எச்சரிக்கையை மீறி ஏரியில் குளித்ததால் நடந்த விபரீதம்!

0 2086

சென்னையில் ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சுனில் குமார் ,விஷாந்த் , கோகுல். இவர்கள் மூவரும் அதே பகுதியில்  தனியார் பள்ளியில் 6- ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

நண்பர்களான இவர்கள் மூவரும் தினமும் மாலை நேரத்தில் அந்த பகுதியில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம்போல விளையாடச் சென்ற 3 சிறுவர்களும் இரவு வரை வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சியடைந்த  சிறுவர்களின் பெற்றோர்கள், அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுவர்கள் குறித்து எந்த  தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் , சிறுவர்கள் 3 பேரும் சிட்லப்பாக்கம், பெரிய ஏரி அருகே விளையாடிக்கொண்டு இருந்ததாக, சிலர் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து , சிறுவர்களின் பெற்றோர்கள் ஏரிக்கரை அருகே சென்று பார்த்தபோது கலங்கல் பகுதியில் சிறுவர்களின் துணிகள் இருந்துள்ளன. பதறிய பெற்றோர்கள் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற  சிட்லபாக்கம் காவல்துறையினர் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று ஏரியில் இறங்கி சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இரவு 9:45 மணி அளவில் சிறுவன் சுனில் குமாரின் உடல் முதலில் மீட்கப்பட்டது. சில மணி நேர தேடுதலுக்கு பிறகு மீதமுள்ள 2  சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது. பின்னர் மூன்று பேரின்  உடல்களையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஏரியில் குளிக்காதீர்கள் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிப்பதால் பலி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments