அமெரிக்க டாலருக்கு நிகரான பிட்காயின் மதிப்பு புதிய உச்சம்

0 11038

அமெரிக்க பங்குச்சந்தையில் பிட்காயினின் மதிப்பு 62 ஆயிரத்து 741 டாலராக அதிகரித்து புது உச்சம் தொட்டு உள்ளது. 

இணையதள பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குசந்தையில் பிட்காயினின் விலை 5 சதவீதம் அதிகரித்தது உள்ளது.

அதேபோல் மற்றொரு இணையதள பணமான எத்தேரியமும்  அதிகரித்து 2 ஆயிரத்து 205 டாலராக புது உச்சம் தொட்டது. ஏற்கனவே எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் 1 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பிட்காயினில் முதலீடு செய்து இருந்த நிலையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்து உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments