கொரோனா அதிகரித்தாலும் நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 3235

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் மற்றும் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இடையிலான சந்திப்பு காணொலி வழியாக நடைபெற்றது. அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை உருவாகியுள்ள போதிலும், பெரிய அளவில் பொது முடக்கங்களை அமல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை என்று கூறிய அவர் தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2-ஆவது அலை எதிர்கொள்ளப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments