மகாராஷ்ட்ரா முழுவதும் 144 தடை உத்தரவு இன்று முதல் அமல்

0 3161

மகாராஷ்டிராவில் மீண்டும் பொதுமுடக்கம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.

அங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 15 நாள் ஊரடங்கை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதன்படி இன்று இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வருவதற்கும், அத்தியாவசிய வாகனங்கள் தவிர ஏனைய வாகனங்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் உணவகங்கள், திரையரங்குகளை மூடவும் மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments