தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்ட மும்பை... கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

0 2809

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் ஜாதவ் 56 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் ரஸ்செல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான நிதிஷ் ராணா 57 ரன்களும், சுப்மன் கில் 33 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறியதால், 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments