ஈரோடு : மனைவிக்கும் தோழிக்கும் கடவுள் வேடம் போட்டு கல்யாணம் செய்து, பெற்ற பிள்ளைகளையும் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

0 46343

ரோட்டில் மனைவியையும் அவரது தோழியையும் சிவன் - பார்வதி என சித்தரித்து, பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்திய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட நபர் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற நபர், தனது முதல் மனைவி ரஞ்சிதாவையும் இரண்டாவது மனைவியின் தோழி சசி என்பவரையும் சிவன் - பார்வதியாக சித்தரித்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததோடு, தனது 2 மகன்களை கொடூரமாக கொடுமைப்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிருக்குப் பயந்து தப்பிய சிறுவர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ராமலிங்கம், அவனது முதல் மனைவி ரஞ்சிதா, இரண்டாவது மனைவி இந்துமதி, அவரது தோழி சசி ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments