தர்ணா போராட்டத்தின் போது படங்களை வரைந்து தனது ஓவிய திறமையை வெளிப்படுத்தினார் மம்தா பானர்ஜி

0 2157

மேற்கு வங்காளத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி படங்களை வரைந்து தனது ஓவிய திறமையை வெளிப்படுத்தினார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி சர்ச்சைக்குரிய விதமாக பேசிய புகாரில், மம்தா பானர்ஜி 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்த நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தாவில் மதியம் 12 மணி முதல் 3 மணி நேரம் மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது நாற்காலியில் அமர்ந்தபடி வரிசையாக படங்களை வரைந்த அவர், அதனை செய்தியாளர்களிடமும் காட்டினார். மேற்கு வங்கத்தில் 5வது கட்ட சட்டமன்ற தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments