தமிழகத்தில் ரயில் பயணிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு - தெற்கு ரயில்வே

0 6678

மிழகத்தில் பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே கூறியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் மையங்கள் மற்றும் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகள், உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச்செல்ல வேண்டும், வெளிமாநிலங்களில் இருந்து தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments