சிதம்பரம்: குடும்பத்தகராறு.... தந்தையுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகன்!

0 3956

சிதம்பரம் அருகே பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது லால்புரம் ஊராட்சி. இங்கு உள்ள தொடார்ந்தாளம்மன் கோவில் தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கவரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களின் 15 வயது மகன், அதேப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சந்தியாவிற்கும் அவரது கணவர் பால முருகனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதியம் ஒரு மணி அளவில் வழக்கம் போல சந்தியாவிற்கும் பாலமுருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பாலமுருகனும், அவரது மகனும் ஆத்திரம் அடைந்து தனது தாய் சங்கீதாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்த சிறுவனையும் அவரது தந்தை பால முருகனையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரம் பகுதியில் பெற்ற தாயை தந்தையுடன் சேர்ந்து மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments