மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா திருக்கல்யாண நிகழ்வை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி..!

0 3513
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா திருக்கல்யாண நிகழ்வை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

துரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழாவில் திருக்கல்யாண நிகழ்வை நேரில் காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வருகிற 15 ஆம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி திருவிழா நடத்தப்பட உள்ளது.

வருகிற 24 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வின் போது, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமண கோலத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments