10 ரூபாய்க்கு சாம்பார் கொடுக்காத ஆத்திரத்தில் போலீஸ் ரூ 5000 அபராதம்... கொரோனாவ விட கொடுமையப்பா..!

0 78057
ஹோட்டலுக்கு விதிக்கப்பட்ட 5,000 அபராதம்

 காஞ்சிபுரத்தில் ஓசி சாம்பார் கொடுக்கவில்லை என்பதாற்காக ஹோட்டலுக்கு ரூ.5,000 அபராதம் விதித்த போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் பிரபல தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு கடந்த 9- தேதி சென்ற போலீஸ் ஜீப் டிரைவர் தன்ராஜ் ஓசி சாம்பார் கேட்டுள்ளார். ஓட்டல் ஊழியர்கள் 'ஓசியில் சாம்பார் தர இயலாது ' என்று கூறியுள்ளனர். இதனால். ஹோட்டல் ஊழியர்களுக்கும் அவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறுநாள் அதே ஹோட்டலுக்கு வந்த சப் -இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஹோட்டலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

உடனே அருகிலிருந்த ஜீப் டிரைவர், ' ஓசியில் சாம்பார் கேட்டா கொடுக்கல, இந்த ஹோட்டலுக்கு எல்லாம் ரூ.500 அபராதமா 5 ஆயிரமா பைன் போடுங்க' என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ஹோட்டலுக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். கொரோனா தொற்றால் ஹோட்டல் தொழிலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலைமை ஓரளவு சீரடைந்து வந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால், போலீஸ்காரர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments