மும்பை : தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் 11 கொரோனா நோயாளிகள் மரணம்

0 1499

மும்பைக்கு அருகே உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மும்பைக்கு அருகே பால்கார் மாவட்டத்தில் வாசி-விரார் மாநகராட்சியில் வினாயக், ரித்தி வினாயக் என 2 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டிருந்த  கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் 7 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ராய்காட்டில் இருந்து மாநில அரசின் சார்பில் வாசி-விரார் மாநகராட்சிக்கு 10 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்ட போதும் அதை மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் மாநகராட்சி அலட்சியம் காட்டியதே உயிரிழப்புகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments