கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ராஜினாமா

0 1042
கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ராஜினாமா

கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், பதவி விலகியுள்ளார்.

தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறுபான்மையின மேம்பாட்டு நிதி நிறுவனத்தில், உறவினரை பொது மேலாளராக அமைச்சர் ஜலீல் நியமித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில லோக் ஆயுக்தா, அமைச்சர் ஜலீல் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி முதலமைச்சருக்கு அறிக்கை அளித்தது.

இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை, முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அமைச்சர் கே.டி.ஜலீல் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments