திருமண தேதியை அறிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்

0 3547

திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிண்டன் வீராங்கணை ஜுவாலா கட்டாவை வருகிற 22-ம் தேதி கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷாலும் - பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

இந்த நிலையில், இருவருக்கும் வருகிற 22-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ள விஷணு விஷால், திருமண அழைப்பிதழையும் பகிர்ந்துள்ளார். விவாகாரத்து பெற்ற விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments