தமிழக கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

0 14808
தமிழக கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மிழகத்தில் கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு 10 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே அறிவித்தபடி, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கோவில்களில் நடத்தப்படும் திருமணத்திற்கு 10 பேருக்கும் மேல் அனுமதிக்கக் கூடாது, கோவில் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணத்திற்கு 50 பேருக்கு மிகாமல் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments