14 வயது சிறுமியை சீரழித்த 12 கயவர்கள் ... பெற்றோருக்கு ரூ. 10,000 நஷ்ட ஈடு கொடுத்த கொடுமை!

0 23932

நாமக்கல் அருகே , 14 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த  11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மேலும் தப்பியோடிய ஒருவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ளப்பா நகர் பகுதியில் ஒரு  தம்பதி வசித்து வந்தனர்.  இவர்களுக்கு  மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளார்.

மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில்,  14 வயது மகள் தனது ஆக்கா  வீட்டில் தங்கியிருந்தார் . இந்த நிலையில்,சகோதரியின் கணவன் சின்ராஜ் , சிறுமியை  பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். மேலும் சின்ராஜ் தனது நண்பர்களான குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோருக்கும் மனைவியின் தங்கையை அனுப்பி வைத்துள்ளான். 

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சின்ராஜின் நண்பர்கள்  ரூ.10ஆயிரம் நஷ்ட ஈடாக சிறுமியின் பெற்றோருக்கு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமி அதேப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு சென்றார். சிறுமியை வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர்கள் மிரட்டி சீரழித்துள்ளனர். 

இது குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியாவிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் தீவிர விசாரணை செய்த குழந்தைகள் நல அதிகாரி ரஞ்சிதப்பிரியா இது குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments