தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம்..! கொரோனா விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை

0 2072
தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம்..! கொரோனா விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை

மிழகம் முழுவதும் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸின் 2-வது அலையை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், காவல்துறையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும், விதிகளை மீறியதாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், இலவசமாக மாஸ்க் வழங்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கும்பகோணத்தில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி பிடித்த போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்தோடு, இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments