மும்பை அருகே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 7 நோயாளிகள் மரணம்

0 1312

மும்பை அருகே, வாசி-விரார் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நள சோபாரா மருத்துவமனை ஐசியூவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. 

போதிய எண்ணிக்கையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததும், மருத்துவர்களின் அலட்சியமுமே ஒரே நாளில் 7 பேர் இறக்க காரணம் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இறந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு வரும் போது ஏற்கனவே உடல் நிலை சீரியசாக இருந்தவர்கள் என விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே வாசி-விரார் மாநகராட்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், போதிய எண்ணிக்கையில் அவற்றை வழங்குமாறும் மாநில அரசை கேட்டு மேயர் ராஜீவ் பட்டேல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments