டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகளை முழு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

0 1000

டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கடந்தாண்டை காட்டிலும் இம்முறை, நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு  அதிகரித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி அரசு, அப்போலோ(Apollo), சர் கங்காராம் (Sir Ganga Ram Hospital), ஹோலி பேமிலி (Holy Family) உள்ளிட்ட 14 தனியார் மருத்துவமனைகளை முழுமையாக கொரோனா சிகிச்சை மருத்துவ மையமாக செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளது.

19 தனியார் மருத்துவமனைகள் 80 விழுக்காடு அளவிற்கும், 82 தனியார் மருத்துவமனைகள் 60 சதவிகித அளவுக்கும், ஐசியூ படுக்கைவசதிகளை, கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கவும், டெல்லி அரசு ஆணையிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments