அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1405
அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

னைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 24 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments