கொரோனா பரவுவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

0 720
கொரோனா பரவுவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 13 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சூழலில் தேர்வுகளை நடத்தினால், டெல்லியில் பெரிய அளவில் கொரொனா பரவும். எனவே தேர்வை நடத்துவதற்குப் பதிலாக, மாணவர்களின் உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கலாம் என வீடியோ செய்தி ஒன்றில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் கொரோனாவின் நான்காவது அலை வீசுவதாகவும், மூன்றாவது அலையை விட இது கொடுமையானது என்பதால் மக்கள் மிகவும் அத்தியாவசியமான தேவைகள் இருந்தால் ஒழிய வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments