நாமக்கல்லில் கடந்த 15 நாட்களில் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு என தகவல்?

0 11733
நாமக்கல்லில் கடந்த 15 நாட்களில் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு என தகவல்

டும் வெப்பத்தால் நாமக்கல்லில் கடந்த 15 நாட்களில் சுமார் 15 லட்சம் பண்ணை கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாமக்கல்லில், ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே கடுமையான வெப்பம் நிலவிவரும் சூழலில், கடந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் 105 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவானது.

இதனை தாக்குப்பிடிக்க முடியாத கோழிகள், கூண்டுகளிலேயே உயிரிழந்துவிட்டதாகவும், இதனால் முட்டை விலை தொடர்ந்து உயரும் எனவும் கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கோழித்தீவன மூலப்பொருளான சோயாபுண்ணாக்கு, ஒரு கிலோ 35 ரூபாயில் இருந்து 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் புதிய குஞ்சுகளை பண்ணைகளில் விடுவதும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, பண்ணைகளில் சுமார் 1 கோடி அளவிற்கு முட்டை உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments