தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெயக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 1829

மிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 14 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், 15 ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 16 ஆம் தேதி நீலகிரி, கோவை தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

17 ஆம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்க கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments