மேற்குவங்கத்தில் பாஜக வல்லமை மிக்க சக்தியாக திகழ்கிறது - பிரசாந்த் கிஷோர்

0 3900
மேற்குவங்கத்தில் பாஜக வல்லமை மிக்க சக்தியாக திகழ்கிறது - பிரசாந்த் கிஷோர்

மேற்குவங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வல்லமை மிக்க சக்தியாகத் திகழ்வதாக, தேர்தல் பிரச்சார வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்களுடன், கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலி மூலம் நிகழ்த்திய உரையாடல் கசிந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜக நன்றாக வளர்ச்சி பெற்றிருப்பதை தாம் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியிருக்கும் பிரசாந்த் கிஷார், ஆனால் அக்கட்சியின் வெற்றி இரட்டை இலக்கத்தை தாண்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில், பாஜக வல்லமை பெற்றாலும், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற தனது முந்தயை கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments