முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு சொந்த செலவில் முகக்கவசம் வழங்கும் காவலர்

0 1354
முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு சொந்த செலவில் முகக்கவசம் வழங்கும் காவலர்

துரையில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் சொந்த செலவில் முகக்கவசங்கள் வழங்கி வருகிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் பழனியாண்டி அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தாம்பூல தட்டில் வைத்து இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகிறார்.

அத்தோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments