தமிழர்கள் அனைவர் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவட்டும்: முதலமைச்சர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

0 1068

தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன் என்ற பாரதிதாசனின் சொற்களை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மலரும் இப்புத்தாண்டு அனைத்து தமிழர்களின் வாழ்விலும் அன்பும், அமைதியையும் கொண்டு வந்து, நலமும், வளமும் பெருகச் செய்ய வேண்டும் எனக் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிடப்பட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், தடைகளை தகர்த்து புதிய சாதனைகள், வெற்றிகளை பெற்று, தமிழக மக்கள் தங்கள் வாழ்வில் மேலும் உயர்வடைய வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருகி தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments