இது நிஜ என்கவுண்டர் இல்ல.... வெப் சீரிஸ் காட்சி! வைரல் வீடியோவுக்கு முற்றுப்புள்ளி

0 1491

ஹரியானாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலீசார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், அது வெப் சீரிஸ்காக படமாக்கப்பட்ட காட்சிகள் என்பது தெரியவந்துள்ளது.

போலீசாருக்கும் இரண்டு பேருக்கும் இடையே சண்டை வந்தது போலவும், போலீசார் அவர்களை கிழே தள்ளிவிட்டு துப்பாகியால் சுட்டுக்கொன்றது போல காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வந்தன.

விசாரணையில் இந்த வீடியோ ஹரியானாவில் பிரபல வணிக வளாகம் முன் எடுக்கபட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து, அது வெப் சீரிஸ்காக படமாக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments