கொரோனா 2ம் அலை எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா?

0 3881
கொரோனா 2ம் அலை எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா?

கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகி உள்ளதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைக்கலாமா என சிபிஎஸ்இ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தேர்வுகளை மே 4 ஆம் தேதி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு ஆசிரியர்களையும், மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை என்பதால் 35 லட்சம் மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்பதால் இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவோ அல்லது ஒட்டுமொத்தமாக ரத்து செய்யவோ எந்த திட்டமும் இல்லை என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திட்டமிட்டபடி தேர்வு துவங்குவதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்வுகளை தள்ளிவைத்து புதிய தேதியை முடிவு செய்வதில் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளும், சிபிஎஸ்இ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments