இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 1.61லட்சம் பேருக்கு கொரோனா..!

0 2455
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 1.61லட்சம் பேருக்கு கொரோனா..!

ந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் ஒரு லட்சத்து61ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வரும் சூழலில், 24 மணி நேர பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 1லட்சத்து61ஆயிரத்து736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 879 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம், ஒரே நாளில் 97ஆயிரத்து168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்து 12லட்சத்து64ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 10கோடியே 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments