இங்கிலாந்து உருமாறிய கொரோனா வைரசை விரட்டும் இந்திய தடுப்பூசிகள்

0 15399
இங்கிலாந்து உருமாறிய கொரோனா வைரசை விரட்டும் இந்திய தடுப்பூசிகள்

இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் உருமாற்றம் பெறவில்லை எனக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால், இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் மட்டுமே இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இதில், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி, இங்கிலாந்து மற்றும் பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நன்றாக செயல்படுவதாக குறிப்பிட்டார். கோவிஷீல்டு தடுப்பூசி, உருமாறிய இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு எதிராக நன்றாக செயலாற்றுவதாகவும், பிரேசில் வைரசுக்கு எதிரான தாக்கம் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments