கன்னியாகுமரியில் அதிவேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 7729

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே போக்குவரத்து மிகுந்த சாலையில் அதிவேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பண்டாரவிளையை சேர்ந்த அபினேஷ்ராஜ் என்ற இளைஞர், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த அபினேஷ்ராஜ், சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார், அபினேஷ்ராஜ் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments