இந்தியாவில் ஸ்புட்னிக் v கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

0 1973
நாட்டின் 3ஆவது கொரோனா தடுப்பூசி.! இந்தியா ஒப்புதல்.!

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில், 3ஆவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக் கொண்டுவரப்படுகிறது. 

ஐதாராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனமும், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவை இணைந்து, கோவாக்சின் தடுப்பூசியை கண்டறிந்தது. நமது உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி, பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தியாவின்-இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கூட்டுத் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இந்திய அரசு, சில மாதங்களுக்கு ஒப்புதல் அளித்தது. புனேவின் சீரம் இந்தியா நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது.

தற்போது நாடு முழுவதும் நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து மாதந்தோறும் 4 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 7 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு 59 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனத்துடன் கடந்த செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 3ஆம் கட்ட 'ஸ்புட்னிக் வி' பரிசோதனை வெற்றி கரமாக நிறைவு பெற்றுள்ளதன் அடிப்படையில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 10 கோடி 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 91.6 சதவீதம் அளவுக்கு பலன் அளிக்கும் என்பது சர்வதேச ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை சேமித்து வைப்பதும், எடுத்துச் செல்வதும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியாவில், 85 கோடி டோஸ் அளவுக்கு, ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்தை தயாரிக்க உள்ளதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்யா நேரடி முதலீட்டு நிதி வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev), இந்தியாவின் ஒப்புதல் குறித்து மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே, ஆண்டொன்றுக்கு, 85 கோடி டோஸ் அளவுக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும் என்றும், இதன்மூலம், 42 கோடியே 50 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments