பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்ட தலைமைக் காவலர்: ஆடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்

0 9006

சென்னையில் பார் உரிமையாளரிடம் தலைமைக் காவலர் மாமூல் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பார்களை நிர்வகித்து வரும் பார் உரிமையாளரிடம் செம்பியம் காவல் நிலைய தலைமை காவலர் ஜெயகாந்தன் என்பவர் மாமூல் கேட்டுள்ளார்.

“செல்போன் கேட்டேன், நீங்கள் வாங்கித் தரவில்லை” என்ற புலம்பலோடு தொடங்குகிறது ஆடியோ. தொடர்ந்து தற்போது புதிதாக வந்துள்ள பெண் ஆய்வாளரும் பணம் கேட்கிறார். எனவே வழக்கமாகக் கொடுக்கும் 24 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிடுங்கள் என நீள்கிறது அந்த ஆடியோ.

இந்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், தலைமைக் காவலர் ஜெயகாந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments