கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற 30ந்தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 985
கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற 30ந்தேதி நடைபெறும்

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் வகாப்,  கே.கே.ராகேஷ், வயலார் ரவி ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 21-ந் தேதியுடன் முடிவடைகிறது.  இதனை அடுத்து இந்த 3 இடங்களுக்கான தேர்தல்  இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் 30-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments