கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் 7வது நாளாக நீடிப்பு

0 3010
கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் 7வது நாளாக நீடிப்பு

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று ஏழாவது நாளாக நீடிக்கிறது.

பேருந்து சேவை முடங்கியதால் யுகாதி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் தவிப்புக்கு ஆளாயினர்.6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடியூரப்பா, போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.. இதுவரை போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை.

இதனால் பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களுடன் குறைந்த அளவிலான பேருந்துகளே ஓடுகின்றன. இதனால் சாமானிய மக்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments