டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

0 2362
டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அம்மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல். கரூர்,அரியலூர், பெரம்பலூர்,தஞ்சை, நாகை. திருவாரூர், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை முதல் 16 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments