அதிரடி காட்டிய இரு அணி கேப்டன்கள்.... கடைசி பந்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

0 4594
அதிரடி காட்டிய இரு அணி கேப்டன்கள்.... கடைசி பந்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சனை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்த அந்த அணி 4 ரன்னில் வெற்றியை இழந்தது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 7 சிக்சர்களுடன் 119 ரன்கள் குவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments