கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்த வேண்டும்... பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

0 1234
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்த வேண்டும்... பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

கொரோனா தடுப்பூசித்திட்டத்தை குறிப்பிட்ட வயதுக்குரியோருக்கு மட்டுமின்றி தேவைப்படும் அனைவருக்கும் வழங்கும்படி விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் மூன்று அல்லது 5 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி மருந்து கையிருப்பில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து தடுப்பூசி மருந்துகளுக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக தாம் ஆலோசனை நடத்தியதையும் குறிப்பிட்டுள்ள சோனியா, ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments