கோவையில் பேக்கரி உரிமையாளரை அடித்து இழுத்துச் சென்ற காவல் உதவி ஆய்வாளர்: வெளியான சிசிடிவி காட்சி

0 6859

கோவை குனியமுத்தூர் அருகே பேக்கரிக்குள் புகுந்து எஸ்.ஐ ஒருவர் கடையின் காசாளரை அடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 29ஆம் தேதி, குனியமுத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி அருகேயுள்ள பேக்கரி ஒன்றுக்குள் நுழைந்த குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ், 10 மணி ஆகியும் பேக்கரியை ஏன் மூடவில்லை எனக் கேட்டு காசாளரை தாக்கி தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து தாக்கியதற்கு கோவை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உதவி ஆய்வாளர் முத்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments