வேலூரில் ஆலைகள், நிறுவனங்கள், ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

0 2413

வேலூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, தனிநபர் இடைவெளியை பின்பற்றும் வகையில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் காய்கறிகடைகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments