”ஏப்.18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் செயல்படாது” -ரிசர்வ் வங்கி தகவல்

0 1605
”ஏப்.18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் செயல்படாது” -ரிசர்வ் வங்கி தகவல்

ருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் என்இஎப்டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments