மம்தாவின் தூண்டுதலால் மக்கள் மத்தியப் படையினரின் துப்பாக்கிகளைப் பறித்துச் சுட்டதால் 4 பேர் பலி - அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டு

0 1155

மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் மக்கள் மத்தியப் படையினரிடம் இருந்து துப்பாக்கிகளைப் பறித்துச் சுட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் துப்குரி என்னுமிடத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். மத்தியப் படையினரை முற்றுகையிடும்படி மக்களை மம்தா பானர்ஜி தூண்டிவிட்டதாகவும், அதையடுத்துத் துப்பாக்கிகளைப் பறித்தவர்கள் சுட்டதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

4 பேர் உயிரிழந்தது பற்றியே மம்தா பேசுவதாகவும், ஆனந்த் பர்மன் என்பவர் வாக்களிக்க வந்தபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது பற்றி மம்தா பேசவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments