டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று

0 573
டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் ஒரு நீதிபதிக்கு அறிகுறிகள் இருந்தாலும் அவரது பரிசோதனை அறிக்கை இது வரை வரவில்லை. நீதிபதிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தை டெல்லி ஐகோர்ட் பார் அசோஸியேஷன் மூடியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி தான் நேரடி விசாரணை துவங்கியது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதால், வரும் 23 ஆம் தேதி வரை மீண்டும் காணொலியில் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 777 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments