மதுபோதையில் துணி வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை நீர் என நினைத்து குடித்த நபர் உயிரிழப்பு

0 1162

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஏற்கெனவே மதுபோதையில் இருந்த நபர், தண்ணீர் என நினைத்து, துணியை வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை மதுவுடன் கலந்து குடித்ததால் உயிரிழந்தார்.

காஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளியான காளி என்ற அந்த 63 வயது நபர், நேற்று பணி முடிந்து போதையிலேயே வீடு திரும்பி இருக்கிறார். வீட்டுக்கு வந்து மீண்டும் மது அருந்த எண்ணியவர், தண்ணீர் என்று நினைத்து  துணி வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை மதுவுடன் கலந்து குடித்ததாகக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று சென்னை அயப்பாக்கத்தில் கண் பார்வை குறைபாடு கொண்ட மூதாட்டி ஒருவர் தண்ணீர் என நினைத்து, அமிலத்தை எடுத்துக் குடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments