அடையாறு கிரீன்வேஸ் ரயில் நிலைய கீழ்தளத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை மீட்டு போலீசார் தீவிர விசாரணை

0 1192
அடையாறு கிரீன்வேஸ் ரயில் நிலைய கீழ்தளத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை மீட்டு போலீசார் தீவிர விசாரணை

அடையாறு கிரீன்வேஸ் ரயில் நிலையத்தின் கீழ்தளத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், எலும்புக்கூட்டை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எலும்புக்கூடு கிடந்த இடத்தில் ஆய்வு செய்த தடயவியல்துறையினர், அது ஆண் எலும்புக்கூடாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக வழக்கை கையில் எடுத்து விசாரிப்பதில் ரயில்வே போலீசாருக்கும் அபிராமபுரம் போலீசாருக்கிடையே  இழுபறி ஏற்பட்டது. பின்னர் வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அபிராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments