ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்

0 2059
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்

ரஷ்ய தயாரிப்பான, ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில்  ஏற்கனவே கோவாக்சின், கோவிஷில்டு என 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனை கூட்டத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments