செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

0 1803

சென்னையில், செல்ஃபி எடுத்த போது கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்த I.T நிறுவன ஊழியரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், நேப்பியர் பாலம் அருகே செல்பி எடுக்க முயன்ற போது கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளைஞரை மீட்டனர்.

கூவம் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரே இருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி இளைஞர் தப்பினார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments