ஏலகிரியில் அமைந்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி

0 4615
ஏலகிரியில் அமைந்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அமைந்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பராமரிப்பாளர்கள் மட்டுமே தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். வீட்டில் பணம், நகை இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும், போலீசாரிடம் மாட்டிவிடக்கூடாது என எண்ணி சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்கை மட்டும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments