அப்பாவிகள் மீது அதிரடி தாக்குதல்...சப் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!

0 31129
தாக்கப்பட்ட பெண்கள்

 அப்பாவிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

கோவிட் 19 - கட்டுப்பாடு காரணமாக உணவுக் கடைகள் 11 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன், பார்சல் கொடுக்கலாம் என்று அறிலித்துள்ள  நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகே அரைவாசிக் கதவை மூடியபடி பார்சல் தருவதற்காக கடைக்காரர் இருந்துள்ளார்.

அப்போது ஓசூர் செல்வதாக இருந்த 5 பெண்மணிகள் அவசர அவசரமாக ஓடி வந்து சில நிமிடங்களில், அமர்ந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறோம் என்று கேட்க, பெண்கள் என்பதால் பரிதாபப்பட்டு கடைக்காரரும் அனுமதித்திருக்கிறார். 

அப்போது அங்கே வந்த முத்து எனும் உதவி ஆய்வாளர், கடைக்குள் புகுந்து தடி, கம்பி எனக் கைக்குக் கிடைத்ததை வைத்து அனைவரையும் தாக்கியதுடன் கடையையும் சேதப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் அலை கோவிட்டைக் கையாள காவல்துறை தலைமை அலுவலர்கள், களத்தில் இருக்கும் காவல்துறையினருக்கு இப்போதே தகுந்த அறிவுரையும், வழிகாட்டுதல்களையும் இதற்கிடையில் முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments